Featured post

வெகுளாமை(சினம் காத்தல்)

மனிதனுக்கு முக்கியமாக உயிரை பற்றி இருப்பவை ( பிறவியிலேயே) காமம், கோபம், மயக்கம் என்பவை. வீடு பேறு அடைய இவை இம் மூன்றும் தடை கற்களாகும். இவைற்றை அறவே நீக்க முடியாவிட்டாலும் விலக்கி வைக்க பழகலாம். ஔவையார், ஆகவே

”   ஆறுவது சினம்”  என்றார்.—— சினத்தை அடக்கு. ஒத்தி வைக்கவும்.

சினத்தால் சபிக்கப்பட்டவர்கள் பலர். ஒரு துறவி காட்டில் தவம் செய்கின்றார். இவர் மரத்தின் கீழ் அமர்ந்து இருக்கின்றார். தலைக்கு மேலே கிளை மேல் ஒரு கொக்கு அமர்ந்து இருந்தது. எதேச்சையாக அது எச்சமிட்டது.  துறவி மேல் வீழ, அவர் அண்ணாந்து பார்த்து சினமுற்றார். அவர் கண்களில் தீ பொறி பறக்க, அந்த கொக்கு சாம்பலாயிற்று. தவம் கலைந்தது. நல்ல பசி. துறவி ஒரு வீட்டிற்கு சென்று கையேந்தி உணவு கேட்டார்.   இல்லாளும் வீட்டிலுள் உடனே சென்றாள்.

அது சமயம் குடும்பத்தினருக்கு பணிவிடை செய்யும் நேரம். சற்றே, நேரம் கழிந்து வந்து பசியில் இருந்த துறவிக்கு உணவு கொடுத்தாள். அப்போது அவர் சினமுற்று அவளை நோக்கினார்.

அதை கண்ட இல்லாள், அவர் கருத்தை அறிந்து  “கொக்கு  என்று நினைத்தாயோ கொங்கணரே ” பதில் உரைத்தாள். வியப்புற்ற துறவி இவளுக்கு எவ்வாறு நாம் கொக்கை சாம்பலாக்கியது, அறிந்தாள் என வினவினார். அவளின் ஆற்றலை கண்ட வியந்து போனார். அதையே

வள்ளுவர்சொன்னார்
                                                     ” செல்லாவிடத்து ச்சினம் தீது, செல்லிடத்தும்
இல் அதனின் தீய பிற “


துறவியின் சினம்  (செல்லிடத்தும்) கொக்கிடம் சென்றது. ஆனால்  இல்லாளிடம் இயலவில்லை. அவளது கணவனிடத்து உள்ள அன்பின் வலிமையால் துறவியின் ஆற்றல் இல்லாது போயிற்று. துறவி தன் தவ வலிமையை இழந்தார்.

 

நீ உன் வலிமையை உன்னை விட வலியவனிடமும் (போலிஸ்காரனிடமும்) காட்ட வேண்டாம்,  உனக்கு எளியவரிடமும் கோபம் கொள்ளாது  இருத்தல் உத்தமம்.   அதை ,

“மறத்தல் வெகுளியை யார் மாட்டும், தீய
பிறத்தல் அதனான் வரும்.

சினம் கொள்பவரை, சினம் அழித்து விடும்.  அவனுக்கு நெருங்கியவரும் விலகி சென்று விடுவர். அளவு கடந்த சினம் கொள்பவரை இறந்ததாக,   கொள்ளபடுவர் என குறள் கூறுகிறது.

“இறந்தார், இறந்தார் அனையர், சினத்தை
துறந்தார், துறந்தார் துணை. ”

ஆக, பாரதி சொன்ன  “ரௌத்திரமும்  பழகுவோம். ” ஆனால் யார் மாட்டும் வெகுளியை மறந்து விடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அன்புடைமை

அன்புடைமை

 இங்கு என் பதிவுகள் யாவும் திருவள்வ பெருமான், சொல்லியவையாகும். அனைத்தும் தெய்வ புலவர் மொழிந்ததால், அவ்வளவும் வாய்மையாகும். அறமாகும்.

அன்புடைமை என்றால் என்ன?

அன்பு மனத்தின் கண் எழும் ஒரு உணர்வு. மனத்தில் (உயிரில்) உள்ள ஓர் கருவி. (குறள் #: 79.). என்கின்றார். நமக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி, என அய் வகை புலன்கள் உண்டு. அவை யாவும் செயல்பாடு உடையவை. இவை வேலை செய்ய நின்றால் ஊமை, குருடன், செவிடன் என ஆகின்றது.  யாவும் இவை மனத்தோடு தொடர்பு உள்ளவை தாம். ஆகவே, அன்பு என்ற அகப்புலனை நாம் நன்றாக பயன் படுத்த வேண்டும். செய்யா விட்டால் இந்த புலனும் செயல் இழக்கும் என கொள்ளவும்.

பிறந்த குழந்தைக்கும் அன்பு செய்ய தெரிகின்றது. நாமும் அதனோடு அன்பு கொள்கின்றோம். நாம் இளம் வயதினராய் இருந்தபோது நம்மிடம் எல்லோரும் தாய், தந்தை, குடும்பத்தினர் என எல்லோரும் அன்பு காட்டினர். நாம் இல்லறத்தில் புகுந்த போது மனையாட்டியிடம் அன்பு காட்டுகின்றோம். ( மனைவி தன் கணவன் பால் அன்பு பன் மடங்கு பெருக்கி தருகின்றாள். ) வீட்டை விட்டு வெளியே நடக்கும் போது, நண்பர்கள், உற்றார், உறவினர் என பலரிடம் அன்பு உண்டாகின்றது. பிறந்த ஊர், நாடு என பற்று ஏற்படுகின்றது.

அதாவது, அன்பு காட்ட, காட்ட, அன்பு மென், மேலும் பெருகின்றது. பகை நில்லாது ஒழிகின்றது. இருள் இருக்கும் போது வெளிச்சம் வந்தால் வெளிச்சம் உண்டாகின்றது.  அங்கே இருட்டுக்கு வேலை இல்லை. அது போல, அன்பு செலுத்த அறம் விளைகின்றது.  அங்கு பகை ஒழிகின்றது. .

அன்புடைமையில் ஒரு குறள்:

என்பி லதனை வெயிலபோலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லாது எது? ஒன்றை சொல்லுங்கள்.

நமக்கு தெரிந்தது. மண்புழு. இது இரண்டு அறிவு (மெய்யும், வாயும்,) உடைய ஜிவன் என நினைக்கின்றேன். இதற்கு முதுகெலும்பு இல்லை. வெய்யிலில் ஈர பசையுள்ள நிலத்திலிருந்து வெளியே வருகின்றது. வெய்யில் காய தொடங்கின்றது. வெய்யில் வாட்டம் அதற்கு தாங்க முடியவில்லை. வேகமாக நகர இயலவில்லை. வெய்யில் சுட்டு சாகிகிறது.

அது போலவே, அன்பு இல்லாதவர்கள், கள்ளர்கள் இருட்டில் இருப்பார்கள். தீயவர்களுக்கு இருட்டு ஒரு கொண்டாட்டம். வெய்யில் என்ற அறத்தால் ஈர்க்கபட்டு அதனோடு மோதுகின்றர்கள். அறத்திடம் மாட்டி கொள்கின்றார்கள்.

இராவணன் என்பான், அறம் என்ற இராமனோடு, மோத, அவன் கொல்ல படுகின்றான். அதனை, கம்பர், இராமன் கொல்லவில்லை. அறம் தான் வதைத்தது என்றார். அது போலவே அன்பில்லாதவனை, அற க்கடவுள் காய்ந்து கொல்வதாக பரி மேல் அழகர் உரை  எழுதுகின்றார். “அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்” என்று நான்மணி கடிகை கூறுகின்று.

ஏசு பிரான் அயலானை நேசி என்றார். சேக்கிழார் பெருந்தகை, அன்பே சிவம் என்றார். அன்பே கடவுள். அவரை நேசி. அவரது தொண்டர்களை வணங்கு. எல்லா உயிர்களையும், ஒர் அறிவு ஜவியிலிருந்து 6 அறிவு ஈராக எல்லாவற்றையும் நேசி. எல்லாவுயிர்களிலும் ஆன்மா உண்டு. அதில் ஆண்டவன் வசிக்கின்றார். (திருவாசகம்)

ஆகவே, அன்பு செய்யுங்கள். மனையாட்டியை அன்பு செய்யுங்கள். அவள் பன் மடங்குகளில் தருவாள். குழந்தைகளோடு குலாவுங்கள். பகைவனிடமும் கருணை காட்டுங்கள். ஒரு.சமயம் உறவு உள்ளவன் தான் இப்போது பகையாளி. நமக்கு சம்பந்தமே இல்லாதவன் பகையாக மாட்டான். அவனையும் செய்வோம்.

மற்றோரு குறள் :  

அன்பு ஈனும் ஆர்வமுடைமை  அதுஈனும்
நண்பெனும் நாடா ச்சிறப்பு.

பிறரிடம் விருப்பமுடையராய் இருத்தல், அது எல்லோரிடத்தும் நட்பை விளைவிக்கும். அந்த நட்பும், அடுத்துள்ளோரும், அளவு கடந்த சிறப்பை தருவார்கள் என்கிறார். நட்பு வட்டம் மேலும் பெருகி வழியும் என இதனால் அறிகின்றோம்.

குறள்: 76       அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
                மறத்திற்கும் அஃதே துணை.

இங்கு அறம் * மறம் என இரு எதிரான சொற்கள். அறத்திற்கு அன்பு துணையாகும் என்கிறார்.    

ஒருவன் நமக்கு இன்னா செய்து விட்டான். பகை கொள்கின்றோம். அதை மறந்து பகைமை பாராட்டாது, அவன் மேல் அன்பு செய்ய,  பகை நீங்கும். அன்பு பிறக்கும். ஆக அறம், மறத்திற்கும் அன்பு துணை யாகின்றது என்றார்.

குறள்: 79  

புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.    

யாக்கை கண் அன்பு என்ற அகத்து உறுப்பு இல்லாது போனால், புறத்து உறுப்புகளாகிய  மெய், வாய், கண், மூக்கு, செவி, இவைகளால் யாதொரு பயனும் இல்லை என வள்ளுவர் சாடுகிறார்.

   குறள் : 80  அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
               என்பு தோல் போர்த்த உடம்பு.

நம்மை (மனிதனை) இழிவு படுத்தி சொல்கிறார். அன்பின் வழி நின்றால் தான்   உடல் இயக்கம்ஆகும். அன்பில்லாதவர் பிரேதத்திற்கு சமம் எனவாகின்றது. உடம்பு எலும்புகளை போர்த்திய தோலாலாக நிற்கும் என்கிறார்.  


அன்பு நம்மை மகிழ்விக்கிறது. ஏனையோரையும் மகிழ்விக்கிறது.

சமணம்

சமணமதம்

சமணம், இந்தியாவில் தோன்றிய மதங்களில் ஒன்று. மதம் என்பது ஒருவித கொள்கை, அல்லது வழியாம்.

மக்களுக்கு ஒரு கால கட்டத்தில் மத பழக்க வழக்கங்களில் ஒருவித சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. இந்து மதத்தில் மிகுந்த வேள்விகள், வகுப்பு வாதங்கள், மத பிரிவுகள், கட்டு கோப்புகள், சதி, முதலியன, பல கடவுளர்,  பல சட்ட திட்டங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று. மக்களில் சான்றோர் பலர் இந்த குழப்பங்களை போக்கி நல் வழிக்கு, அமைதியான சூழ் நிலைக்கு கொண்டு வர முயன்றனர். ஆகவே, பௌத்தம், சீக்கியம், சமணம் பல எதிர்ப்புகளுக்கிடையே தோன்றின. கௌதம புத்தரால் புத்தம் ஸ்தாபிக்க, அதனை அசோகன் முதலியோர் பரப்பினார்கள்.

வட இந்தியத்தில் இப்போதைய ராஐஸ்தானில் மகா சேனர் உருவாகினார். அவரால் கொண்டு வர பட்டதே சமணம்.

இதை வட தேசத்தில் ஜெயனம் என்கின்றனர். தமிழகத்திலும் பரவியது. பாண்டி நாட்டில் பாண்டியன் நெடுமாறன் சமணத்தை ஆதரித்தான். பல மடங்களும், ஆலயங்கள், சமண பள்ளிகள் தோன்றின. திருச்சினாபள்ளி, காஞ்சிபுரம், முக்கிய இடங்கள் ஆகும். தற்போதும் தமிழ் பேசும் சமணர்கள் காஞ்சியில் சிலர் வாழ்கின்றனர். இவர்களின் பல பழக்கங்கள், கொள்கைகள் எனக்கு உகந்தவை. இவை வைணவம், சைவம், பௌத்தம், சீக்கியம், முதலிய கலவை என்றே சொல்லலாம். முக்கியமாக குருவை மிகவும் கொண்டாடுகின்றனர்.

வட மாநிலங்களில் பல சமண கோவில்கள் உண்டு. இதன் விவரம் வளை தளங்களில் பார்க்கவும்.

  1. குறிப்பாக சமணர்கள் இறைச்சியை தவிர்க்க வேண்டும். உயிர் இம்சை, சேதம், செய்தல் கூடாது. வெளியில் நடக்கும் போது, எந்த ஜந்துகளையும், மிதித்து நடக்க கூடாது.
  2. சாப்பாடு அன்று, அன்று உண்டாக்கி அன்றே முடிக்க வேண்டும். மிகுந்த உணவு மறு நாள் உண்ண  கூடாது. உணவு உண்ணல் பகல் பொழுது தான். இரவு இல்லை. உறுகாய் தவிர்க்க பட வேண்டும். காய் கறிகள் அன்றே வெட்டி அன்றே பயன் படுத்த வேண்டும்.
  3. எந்த உயிரையும் வதைக்க கூடாது.
  4. எல்லா உயிர்களினும் மேன் பட்ட மனித உயிர் (ஆன்மா) தான் கடவுள் என சொல்கின்றனர்
  5. நம் உயிரில் நன்மை, தீமைகள் பதிவுற்று மறு பிறவிக்கு தொடரும்,

ஆகவே பாவங்களான பொய்கூறுதல், களவு, மது, தற்பெருமை பேசுதல், பொறாமை, குறளை, பிறன் மனை விழைவு, வெஃகாமை, வெகுளி, இன்னா சொல், ஏனையவற்றை தவிர்க்க வேண்டும்.  

  • அவ்வையார் சொல்லிய  அறம் செய விரும்பு, அத்தனையும் உண்டு. 
  • புலனடக்க(ஐம் பொறிகள்) விரதங்களை கடைபிடித்து, நிலையாமையை உணந்து, அருள், ஈகையுடன் வாழ்வதாம்.

இவர்கள் வடக்கில், ராஐஸ்தானத்தில் பெரும் பகுதியாக வசிக்கின்றனர். தம் பெயரில் ஜெயின் அடை மொழி வைக்கின்றனர்.

சமணத்தின் கொடைகள்:  தமிழில் பல இலக்கிய நூல்கள் தழைத்தன. முக்கியமாக சிலம்பதிகாரம், மணிமேகலை,  சீவக சிந்தாமணி, ஐம் சிறு காப்பியங்கள், போன்றவைகள். சிரவணபெனகோளா போன்ற மடங்கள் (இப்போதைய கர்னாடகத்தில்) எழுந்தன.  மக்களுக்கு கல்வி அறிவு புகட்டினர். சமண எழுச்சியால் மக்களிடை ஏற்ற தாழ்வுகள் குறைந்தன. பிராணி வதைகள் குறைந்து போயின.

கன்னேடிய குளிரை எவ்வாறு சமாளிக்கலாம்

கன்னேடிய குளிரை எவ்வாறு சமாளிக்கலாம்?

நான் பிறந்தது சென்னை மாநகரத்தில், திருவல்லிகேணி ஆஸ்பத்திரியில், என சொல்வார்கள். அந்த ஆஸ்பத்திரி சென்னையில் அப்போது 1940களில் மிக பெரியது. அதன் பெயர் ‘கோஷா’ ஆஸ்பத்திரி என்பார்கள்.. ஏன் அவ்வாறு அழைத்தனர் என இப்போது கூட புரியவில்லை. ஆனால் அந்த வட்டாரத்தில் முஸ்லீம் பெருமக்கள் பெருவாரியாக  குடியேறி இருந்தனர். அருகில் ஆற்காடு நவாப் அரண்மனையும் 2 கல் தொலைவில் இருந்தது. முஸ்லீம் கோஷா பெண்மணிகள் கூட்டம் அதிகமாக இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து போய் இருக்கலாம் என நான் நினைத்து இருக்கின்றேன். நான் வளர்ந்து சென்னையில் ஓர் ஆண்டு காலம் தான்.  அதன் பின்னர் இந்திய கண்டத்தில் வெவ்வேறு இடங்கள்.. ஆக நான் எப்போதும் 14℃ டிகிரிக்கு மேல் தான் வசித்தேன். என் 65 வயது வரை அங்கு தான் வசித்தேன். எனக்கு குளிரை ப்பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லை.

நான் கன்னேடிய மண்ணில் கால் வைத்த போது நல்ல குளிர் மாதம், டிசம்பர் 6 தேதி. இவ்வாறாக கனடாவிற்கு குடியேறினேன். அந்த முதல் ஆண்டு குளிரை மிகுந்த கஷ்டத்தில் கடந்தேன். ஏப்ரல், மே, விலும் குளிர் வாட்டியது. ஜூலை வந்தபோது இந்திய சூழ் நிலைக்கு வந்த மாதிரியான மகிழ்ச்சி வந்தது. அது அக்டோபர் மாதம் வரை தான். மறுபடியும் இரண்டாவது குளிர் காலம். இவ்வாறக, 10 ஆண்டுகளை கடந்த போது குளிரை ப்பற்றிய ஞானம் சிறிது வந்தது.

 குளிர் வரும் முன்னரே, எவ்வாறு அதனை சமாளிப்பது என கணக்கு போடலானேன். எனக்கு குளிரை பற்றிய பயம் நீ்ங்கி ஒருவாறு குளிரை எப்படியும் எதிர் கொள்ள தான் வேண்டும் என, அக்டோபர் மாதம் முன்னரே திட்டமிடலானேன். தினந்தோறும் வெட்ப, தட்ப அளவீடுகளை குறித்து கொள்வேன். பின்னர் காற்றின் வேகம், திசை, கூடுதல் நேர குளிர் எந்த நேரம், முதலியன.

எனக்கு குளிர் எவ்வாறு உள்ளது.? ஏனையோர் எவ்வாறு எதிர் கொள்கின்றனர்? எவ்வாறு உடை அணிகின்றனர்? சிறு வயதினர் பள்ளிக்கு செல்பவர் எங்ஙனம் ஆடை அணிந்து, செல்கின்றனர்? முதியோர் குளிரில் என்ன, செய்கின்றனர்? மற்றபடி பறவை, விலங்கினங்கள், தாவரங்கள், குளிரை எப்படி தாக்கு பிடிக்கின்றன? என பலவாறாக, சிந்தித்ததின் விளைவு தான் இவ்வுரை யாகும்.                          

கனடா ஒரு பரந்த நாடாகும். நீளத்தில் 5500 மைல்களும், அகலத்திலும் 5200  மைல் தொலைவுகளாகும். கனேடிய சீதோஷ்ண நிலை மிகுந்த மாறுபாடு உடையது. மேற்கே வான்கோவர் பகுதி ராக்கி மலை தொடரால் அரண் செய்யப் பட்டு பசுபிக் மாக்கடல் நீரால் காக்கப் படுகின்றது. அப்பகுதிகளில் அவ்வளவு ஆண்டு முழுவதும் பனி மழை பெய்வதில்லை. கீழை கடற்கரை பகுதி, டோரான்டா பகுதியிலிருந்து  வேறு படுகின்றது.  ஒவ்வொரு பிரதேசங்களுக்கு வெவ்வேறு உடைகள் வேண்டிவருகின்றது. அது போல குளிரில், மிகுந்த குளிர், பனி மழை, கடும் காற்று, வடக்கு பகுதியில் கொடும் பனி என பல இடங்கள். சில தருணங்களில் வட துருவ பிரதேசங்களிருந்து குளிரை தரை வழியாக தெற்கே கொண்டு வந்து கொட்டுகின்றது.

எனக்கு தெரிந்த சில வழிகளை கொண்டு குளிரை சமாளிக்கின்றேன்.

நன்றாக குளிருக்கு தகுந்த உடை அணிகின்றேன். சில சமயம் உடைகள் குளிரை தாக்கு பிடிக்காமல் போகலாம். ஆகவே கையிருப்பில் சில வைக்க வேண்டும். உதாரணமாக கனத்த கம்பளி தேவையில்லை என நினைத்து  எளிய ஆடை உடுத்தி இருப்பீர்கள். திடீரென வெட்ப, தட்பங்கள் மாறு படும். மற்றும், அடுத்த உள்ளோருக்கு தேவைப் பட்டு கொடுத்து உதவலாம்.

வெளியே செல்லும் முன்னர், வெட்ப, தட்பங்கள், எவ்வாறு உள்ளன அறிய வேண்டும். இதற்கு வளை தளம் உள்ளது. இதில் பார்த்து அறிந்து உடை  உடுத்த வேண்டும். 15° செ. டிகிரிக்கு கீழே போகும் போது (குளிர் காலத்தில்)  கம்பளி, உள்ளாடைதெர்மல், என அணிவது நல்லது.

குளிருக்கு ஏற்றார் போல் 2/3 அடுக்கு உடைகளாக  அணிதல் வேண்டும். இடைவெளி விட்டு கண், காது ,மூக்கு மூடவேண்டும். கண்ணுக்கு கண்ணாடியும், காதுக்கு அடைப்பானும் தேவை. இவ்விரண்டின் மேல் உள்ள  மென் படலங்கள் கடும் குளிரை தாங்குவது இல்லை.

கை, கால்களுக்கு உறை தேவை. உறைகள் தடித்து இருக்க வேண்டும். உடலின் நுனி பாகங்களான கை,கால் குளிரில் சடுதியில் உறையும். கழுத்து பகுதியும், மூடுதல் சிறந்தது. . காலுக்கு பனிக்கால தோல் பூட்ஸ் இட வேண்டும். தோல் ஒரு குளிர் தாங்கி.

அதிக குளிரில் வாய் திறந்தால் தொண்டையை குளிர்விக்கும். பிறகு இருமல், சளியினால் அவஸ்தை படவேண்டி வரும். என்னால், –5° செ. டிகிரி குளிரை 10 நிமிட நேரம் காலஅளவுக்கு தாங்க கூடும் என சில சமயங்களில் கணிக்கிறேன்.  அந்த சமயங்களில் 1/2 கி.மி தொலைவுக்குள்ள பாது காப்பான இடங்களுக்கு சென்று விடுகிறேன்..  

நம் உடல் எஃகினால் செய்யப் பட்டதல்ல. ஆகவே குளிரில்/ பனியில் நனையும் கால அளவை குறைக்க வேண்டும்.

உயில்

உயில் என்பது ஒரு மரண சாசனம்\ ஆவணம். அதாவது ஒரு இறுதி வாக்கு. ஆங்கிலத்தில் இதை ‘வில்’ Will  என்பார்கள். இது எல்லோரும் நாம்  அதாவது உயிருடன் இருக்கும்போதே நம் பெயரால் உள்ள செல்வம், உடமைகளை, நாம் மரணித்த பின்னர், யார் அடைய வேண்டும் என ஆவணம் எழுதி வைத்திடல் வேண்டும். இது பல இடையூருகளை நம் சந்ததியருக்கு நீக்கும்.

உயில் இல்லாது போனால் நம் சொத்துகள் யாவதும் எவருக்கு சேரும் என்ற ஐய்யத்தால் அரசால் எடுத்து கொள்ளப்படும். அதாவது காலமானவருடைய சொத்துக்கள் அனைத்தும் முக்கியமாக அவருடைய வங்கி கணக்குகள் (இணைப்பில்லா தனித்தவை,) பதிவு செய்யப்படாத முதலீடுகள், வாகனம், வீடு, தோட்டம், மற்றும் எல்லா( Capital) ஜங்ம செல்வங்கள் அரசால் எடுத்து கொள்ளப்பட்டு உறைய வைக்கப்படும். நாம் அவைகளை ஆண்டு அனுபவிக்க முடியாது. அவை முடக்கபடும்.

இறந்தவருடைய இறுதி நாள் முடிய இறந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கு, நாம் (சந்ததியர்) அடுத்த ஆண்டு மார்ச்சு மாத இறுதியில் தான் செலுத்த முடியும். அதன் பின்னர் அரசால் நியமனம் செய்ய பட்ட ஆணையரால் அரசு நிமயப்படி பங்கிடப்படும்.  இதற்கு 1-3  ஆண்டுகள் ஆகலாம். வருமான வரியானது இறந்தவர் சொத்திலிருந்து கழிக்கபடும்.. இறந்து பட்டவருடைய சொத்து மதிப்பிடப் பட்டு மரணவரியாகவும் 1.5% கழிக்க படும். மதிப்பிட்டிற்கு வக்கீல், நிதி கணக்கர், செலவுகள், போக மிஞ்சுவதே பங்கிடப்படும்.

ஆகவே, நாம் உயிருடன் இருக்கும் போதே, உயில்( வில், Will ) எழுதி வைக்கப் பட்டால், உயிலின் ஆணை படி, உயிலில் குறிக்க பட்ட நபரால் ,உயில் பிரகாரம் சந்ததியரோ, வேறு பட்டவரோ, அதன் படி பங்கிடு செய்யலாம். உயிலை நாம் தயாரிக்கலாம். அல்லது வக்கீலை கொண்டு எழுதி வைக்கலாம். மேலும் வளை தளங்களில் தகட்டு படி யேடுகளாக கிடைக்கின்றது.

மற்றபடி இறந்தவரின் இன்ஷ்யூரன்ஸ் முதலீடுகள், அந்தகாப்பிட்டில் கண்ட நபருக்கு நேரிட்டு Beneficiaryக்கு , claim பேரில் கிடைக்கும். கிளைம் செய்த ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தொகை கிடைக்கும். ஆகவே முதலீடுகள் காப்பீட்டு முதலீடுகளாக சந்ததியருக்கு நாம் இருக்கும் இறுதி நாள் வரை அனுபவித்து விட்டு செல்லலாம். இது முக்கியமாக  பிரிக்கப்பட்ட நிதியம் என (Segregated funds)பெயரில் காப்பீடுகளாக கிடைக்கின்றது.  இறுதி நாள் வரை இந்த நிதியை கைய்யாலலாம்.

முதுமையை எப்படி எதிர் கொள்வது?

முதுமையில் மன நிலை:          முதுமையில் மன அமைதி பெற வேண்டும். இதை எவ்வாறு பெறுவது? அதன் சிறப்பு திறவுகோல் தியானம். மிக முக்கியமானது. தியான நிலை என்பது மனதை ஒருமை படுத்துவது. மற்றும் நாடிசுத்தி செய்வது..

இத்துடன் ஓரளவு யோகம்,  பாடல்கள் (குறிப்பாக பக்தி பாடல்கள் நல்லது) , அற நூல்கள் படிப்பது, கேட்பது,  நல்ல தோழ, தோழியருடன் கலந்து உரையாடல், மற்றும் பயணம், விளையாட்டு, உடற் பயிற்சி,  கோவில், குளம், மசூதி செல்லுதல், வாசக சாலை, சமுக நல ஈடு பாடு, முதலியன.

‘ உடல் ஒர் ஆலயம்’ எனகிறார் திருமூலர் பிரான். அதனை முறையாக காத்து பேணி சித்தி அடைய வேண்டும். அதில் உள்ள ஐம் பொறிகளை (கள்ள பொறிகளை!?-மெய், வாய், கண், மூக்கு,செவி)   கட்டுபடுத்தி அவற்றை கொண்டு தான்    நம் மனத்தை அமைதி படுத்த முடியும் என்கிறார்.

முதுமையில்  வரும் நெருக்கடிகள்:
1. உடல் பலவீனபடுதல்.                                                                                                               2. பிறர் உதவி தேவை படுதல்.                                                                                                       3. மன வழுத்தம், குழப்பம், கவலை, தவிப்பு,  பதட்டம்.                                                   4.  தனிமை படல்,                                                                                                                                5.  அடிக்கடி நோயுறல்,                                                                                                                            6வருமானம் குறைதல்,
7 சலிப்பு, நிம்மதி இன்மை,
8.கழிவிரக்கம், (கடந்த பொற் கால சிந்தனை)
9. உற்றார் மறைவு, விசனம்,                                                                                                      10. 10.பொருள் இழப்பு போன்றவை,.

முதுமை தீர்வுகள்
நம்  உடல் ஆற்றல் குன்றுகின்றது. முதுமையில், உடலில் பெரும் மாற்றம் நிகழ்கின்றது. வயது 40 களில் இதை  உணர தொடங்குகின்றோம்.  இது என் சராசரி யான கணிப்பு ஆகும். நபருக்கு நபர் வித்தியாச படலாம். இது இயற்கையின் இயல்பாகும். வயது 70 களுக்கு பிறகு பரிபூர்ணமாக நிலைமை மோசமாகின்றது. உடல் நம் கட்டுபாட்டில் வருவதில்லை. நம் மனம் இதில் பெரும் பங்கினை வகிக்கின்றது. ஆக மனத்தை ஒரு நிலை படு த்த பல பயிற்சி களை வள்ளுவர் மற்றும் பரிமேல் அழகர் அருளி இருக்கின்றார் கள். அதை அடுத்தாக பார்ப்போம்..

சாவு எல்லோருக்கும் சர்வ நிச்சியம்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு — வள்ளுவரின் விளக்கம்.

ஆகவே இதை முற்றும் உணர்ந்தாக வேண்டும். பிறந்த பின் சாக்காடு தா ன். இதில் யாருக்கும் சிறப்பிடமில்லை. உடல் தளர்வு நிலைமை வரும் போது மன ச்சோர்வு ஏற்படுகின்றது. நலிவடைவதும் நிலை தடுமாறுவதும் இயல்பு தான். மேற்கோளுக்கு ஒரு கத்தரி செடியை எடுத்து கொள்ளுங்கள். நாற்றாக வளரும் போது நல்ல வீரியத்துடன் செழிப்பாக வருகின்றது. காய், கனி, நெற்றுகளை கொடுத்த பின் முதுமை யுற்று பட்டு போகின்றது. அது போல நாமும் பட்டு போகும் காலம் வருகின்றது. ஆகவே கலக்கமோ, தவிப்போ, தேவை இல்லை. நம் மனதை அதற்குள்ள பயிற்சிகளை கொண்டு அமைதி படுத்த வேண்டும். இந்த நிம்மதி இன்மை நல்ல பயிர் நிலத்து உண்டாகும் களைகள் போன்றவை. தினந்தோறும் ஓரிரு முறையேனும் களை எடுப்பு என்ற தியானம் நடத்தல் வேண்டும். (குறள் 4, 7, காண்க. )

வாழ்க்கை முறை மாற்றம்:
வாழ்க்கை முறையில் நாம் சில லதிருத்தம் செய்யலாம். பணியில் இருந்த காலத்து முறைப்படி சீரான வாழ்க்கையில் இருந்து, சுரு சுருப்பாக உழைத்து கொண்டு இருந்தீர்கள். அதே முறையை தொடரலாம். இதில் மனம் ஈடு பட்டு போகும்.

நம் மனதை திருப்ப தொண்டு செய்தலில் ஈடு படுத்ததுதல்,( மருத்து சாலை,முதியோர் இல்லம், பள்ளிகள், நூல் நிலையம், வழிபாட்டு மற்றும் நல் வாழ்வு நிலையங்கள்,) ஏனையோர்க்கு கற்பித்தல், செய்யலாம். புதிய தொழில், மொழி கற்றல், சுற்று பயணம், நல்லோரிடத்து, மற்று அன்பு குடும்பத்தினரிடத்து அளவளாவுதல், அன்பு பராட்டல், முதியோர் விளையாட்டில் பங்கு, உடல் பயிற்சி, முதலியன.

இவைகளால் நம் மனம் செம்மை அடைகின்றது. அருகில் உள்ளோரும்,சமுகமும் மேம் படுகின்றது. எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். முக்கியமாக முதுமை காலத்து தியானம், யோகம், உடற் பயிற்சி, ஈடு பட்டால், வாழ்க்கையை அமைதியாக கடைநாள் வரை கழிக்கலாம்.

Vegitarianism

There is no such word vegetarianism in English until 1800. It has become newly coined word. It is popular in India and other south eastern countries. 30 to 70 percent of people follow the veggie diet since very long time. It is a diet with out any meat and other animal products. But milk products and honey are considered to be vegetarian.

One question arises, meat less food beneficial to human race ?. There are advantages and disadvantages.

The big religions of the world, Hinduism  Buddhism, Jainism,  Sikhism teach the morals of the Veggie food. In Jainism Veggie food  is essential of life being, prescribed. As per Jains only veggie food is consumed by them. The food they prepare, is consumed on the very day prepared. This is very day  after sun rise and  before sun set. They never eat left over food the next day. They do not do any harm to other life and follow principles of non violence to other beings. In Christianity and Judaism,  God did not allow to eat meat to Adam and Eve. In Muslim, animal is slaughtered on certain conditions.

We look into Thirukkural  written by Sage Thiruvalluvar. Meat eating is totally prohibited by him and his principles  :-

1.Eating meat is equal to eating corpse of a dead animal. The person eating will loose the qualities and values of grace, virtue. kindness and compassion towards the humanity as well as other lives.  He will never be virtuous.

2. Eating dead animal will never be sweet, tender, chew able and  as natural as veggie food. It is artificially flavored.  By eating it, you acquire the qualities of characters of dead animal.  You become transformed not merciful to others. This may be true. By eating particular food changes the mood mentally. ( for example coffee, liquor, sweets)

3. By killing other beings,  you kill the animation of the body, not life or soul. One  can not destroy it. It is eternal. It is sin. Also eating is evil and immoral. There are seven kind of persons  involve in.  Hence all seven are liable for the crime. (Killer, eater, cook, seller, taster, and so on.)

4.The person carrying weapon will not be kind to other beings. So also, the persons feasts on another dead body has no regard for goodness on others.

5. Slaying and violence are cruel and unacceptable. If one  do not eat meat, no one hurt  or kill any animal.

6. When doing any  harm to any animal  think yourself, as if when you were in a  such situation, at the mercy of greater species than you. (empathy)

7. If you do not do any harm to any one, other beings (below hierarchy of human) will deem to salute you.

The human beings is supposed to be in the top most rank of species of life.  He possess great powers.  He has to treat the lower species with respect, tenderness and compassion.

Apart from sayings of Thirukkural, you can think of elephants. They are most powerful of all animals and thrive on plant food. The life span of almost 100 years.  Please do not compare with tortoise or crabs live longer life having less animation. The lion and leopards eating on meat live 20 years.

Another thing,  the mood, character, behavior depend on your food habits also. Plant food always gives peacefulness and happiness. The example is coffee, sugar, or liquor,  for change  mood. ,

As per technological calculations to produce one pound of beef,  it is said 10 to 20 pounds of grains to feed them and the huge energy spent  to bring it to dining table. About 10 million pigs are killed annually in Canada for food. Already we destroyed lot of forests and environments for agriculture and habitats. The food industry  take its toll its own on the  ecology. The cattle being ruminants gives more carbon dioxide and methane gases spoiling the atmosphere. The gas let out by the cattle is said to more than the vehicles spewing gases for human use.

Instead of feeding animals for slaughter, we can feed hungry people of the third world. We can refrain from much meat which is more expensive and avoiding factory produced meat and diary products.  – by  gl.

Ref: 1.Thirukkural ( Tamil)
2. Meatless? A fresh look at what you eat- Sarah Elton.

பொருள் ஈட்டுதல்

குடும்பத்தில் பண சேமிப்பு கொண்டு வருதல்:  ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலம் இல்லை”
என்ற கூற்றின்படி பொருள் செல்வத்தை திரட்டுக.
‘பண சேமிப்பு’  இது மிக பெரிய கேள்வி? அதற்கு என்ன செய்யவேண்டும்?

நம் பணத்திற்கு நாம்தான் பொருப்பாளிகள். நாம் தான் பைனான்ஸ் மேனேஜர்.
ஆகவே நம் நிதியை எவ்வாறு கையாளவேண்டும் ?
எப்படி நம் பணத்தை குட்டி போட வைக்கலாம். பார்க்கலாம்.

இதற்கு முதற்படியாக
வரவிற்கு மேல் எப்போதும் செலவு வேண்டாம். அதற்கு அவ்வை பாட்டி
” ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

என்கிறார். அதை பழகி கொள்ள வேண்டும் .

முதலில் உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளுங்கள்.  அதாவது Pay yourself first.    நம் எதிர்கால சேமிப்பிற்கும் அவசர தேவைகளுக்கும் ஒரு முதலீடு போட்டு கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சியதே தான தர்மம். வள்ளுவரும் தனக்கும் ஒரு பங்கை வைக்க சொல்லு கிறார்.

தென்புலத்தார், தெய்வம்,விருந்து, ஒக்கல், தான்,
ஆங்கு ஐம்புலனத்தாரு ஓம்பல் தலை .

இதில் மற்றும்  எமெர்ஜென்சி (அவசர கால )  நிதிக்கும்  (சுமார்  2  மாத வருவாய் ) ஒதுக்க வேண்டும்.
மிச்சம் உள்ளதை பணத்தை அனாவசிய செலவு செய்யாமல்  கணவன் மனைவி இருவரும் திட்டமிட்டு செலவு செய்யவேண்டும்.  உதாரணமாக மளிகை பொருள்கள், காஸ் , பஸ் செலவு , போன், பள்ளிசெலவு , வீடு மோர்ட்ககேஜ் (அத்யாவசிய )செலவுகள் . அதை பழகி கொள்ள வேண்டும் .
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’. என்பதை நினைவில் கொள்க.

இந்த  பழக்கத்தை கைக்கொள்ளவும். இரண்டு மூன்று மாதங்களுக்கு, சிலருக்கு ஓர் ஆண்டு வரை  சிரமமாக இருந்தாலும் பழக  வேண்டும் .இதை நண்பர்களுக்கும் மற்றோர் களுக்கும் சொல்லிவைக்கவும்.

எப்படி நம் பணத்தை குட்டி போட வைக்கலாம். பார்க்கலாம். குறிப்பு:  www.cra.ca

மானியங்கள் தருபவை

(இலவச பணம்)

வரியில்லா முதலீடுகள் வரியை தள்ளி போடுபவை வரி தவிர்க்கும் முதலீடுகள் வரி அனுகூல முதலீடுகள்
RESP, RDSP சொந்தமான ஒரு வீடு ( விற்பனை வரி இல்லை) RRSP RRIF கணக்கீடுகள், ஓய்வூதிய திட்டங்கள் TFSA  காப்பீடுகள், Seg. funds மியூச்சுவல் நிதிகள்

மெடிக்கல் சேமிப்புகள் காப்பீடுகள்